நியூஸ் 7 "தமிழ் ரத்னா விருது" பெற்ற திரு.முத்தாலங்குறிச்சி காமராசு
பிரபல தொலைக்காட்சியான நியூஸ் 7 சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு “தமிழ் ரத்னா விருது” வழங்கி சிறப்பித்து வருகிறது. நெல்லை கவிநேசனின் மிக நெருங்கிய நண்பர் திரு.முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு இந்த விருது நேற்று (22.10.2019) வழங்கப்பட்டது.
விருதுபெற்ற திரு.முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களை நெல்லை கவிநேசன் மனதார பாராட்டி வாழ்த்துகிறார்.
மேலும்,
- சௌநா அறக்கட்டளை (SOWNA TRUST),
- நெல்லைகவிநேசன் யூடியூப் சேனல் [https://www.youtube.com/channel/UCK2AhvfEbKB3sjvF6pHZASA/videos?view_as=subscriber],
- சௌநா கம்யூனிகேஷன்ஸ் [https://www.youtube.com/channel/UC6-HCzRzUz1yk1GJDm8gCLg],
- செந்தூர் வெப் டி.வி. [https://www.youtube.com/channel/UCPAgK3PR_MoABzep7iO270g],
- நெல்லைகவிநேசன்.காம்., [http://www.nellaikavinesan.com/]
- நெல்லைகவிநேசன் டுவிட்டர்.காம்., [https://twitter.com/nellaikavinesa1]
விருது நிகழ்வில்...
தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது.
நியூஸ் 7 தமிழ் நடத்திய தமிழ் ரத்னா நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களை, நியூஸ் 7 தமிழின் நிர்வாக இயக்குனர் திரு.வி.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், மேடையில் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் திரு.செல்லூர் ராஜூ, திரு.ஆர்.பி.உதயகுமார், திரு.கடம்பூர் ராஜூ, திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு, நியூஸ் 7 தமிழ் நிர்வாக இயக்குனர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விருது வழங்கும் விழாவில், கட்டைக்கூத்து திரு.ராஜகோபாஆல் அவர்களுக்கு “கலை ரத்னா விருது”ம், புகழ்பெற்ற தமிழறிஞர் டாக்டர்.தொ.பரமசிவம் அவர்களுக்கு “இலக்கிய ரத்னா விருது”ம், திரு.பிரளயன் அவர்களுக்கு “நாடக ரத்னா விருது”ம் வழங்கி, முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.
மேலும், "கேஸ்ட்லெஸ் கலக்டிவ்" குழுவினருக்கு “இசை ரத்னா விருதும்”, திரு.சதீஷ் சிவலிங்கம் அவர்களுக்கு “விளையாட்டு ரத்னா விருதும்”, திரு.ரவீந்திர குமார் அவர்களுக்கும் சேவை ரத்னா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, “ஆசிரியர் ரத்னா விருது” திரு.பகவான் அவர்களுகம், “தொழில் ரத்னா விருது” திரு. சிபி.செல்வம் அவர்களுக்கும், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களுக்கு “மகளிர் ரத்னா விருதும்” வழங்கி முதல்வர் திரு.எடப்பாடிபழனிசாமி கவுரவித்தார்.
“யுவ ரத்னா விருது” திரு.விழியன் அவர்களுக்கும், “சக்தி ரத்னா விருது” திருமதி.நளீனா பிரசீதா அவர்களுக்கும் வழங்கப்பட்டது. “சிறப்பு விருது” அறிவிக்கப்பட்ட மறைந்த வசனகர்த்தா திரு.கிரேஸி மோகன் அவர்களுக்கான விருதை அவரது சகோதரர் திரு.மாது பாலாஜி பெற்றுக்கொண்டார்.
“மற்றொரு சிறப்பு விருது”, புகழ்மிக்க எழுத்தாளரும், நெல்லை கவிநேசனின் நெருங்கிய எழுத்தாளமான, பாசமிகு திரு.முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களும், “தமிழ் ரத்னா விருது”க்கு தேர்வு செய்யப்பட்ட திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, அவரது சார்பாக அவரது நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகியும், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.
இதையடுத்து, விழாவில் பேசிய முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், - “அரசு திட்டங்களை செயல்படுத்த ஊடகங்கள் உந்துசக்தியாக உள்ளன. நியூஸ் 7 தமிழ் ஆண்டுதோறும் தமிழ் ரத்னா விருதுகள் வழங்குவது, சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. பசுமை புரட்சியின் நாயகன் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தமிழ் ரத்னா விருது வழங்கியது போற்றத்தக்கது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், அரசுடன் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், டெங்குவை ஒழிக்க முடியும். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சிகளை மாணவர்கள் பார்வையிட, தமிழக அரசு ஏற்பாடு செய்யும்” என்று முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
We proud of you,Sir.
பதிலளிநீக்குWe proud of you,Sir.
பதிலளிநீக்குகருத்துரையிடுக