திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறுகதை பயிலரங்கம்

திருச்செந்தூர் 
ஆதித்தனார் கல்லூரியில் சிறுகதை பயிலரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் சிறுகதை பயிலரங்கம் நடைபெற்றது. 



கல்லூரி தமிழ்த்துறையில் இயங்கிவரும் திருவள்ளுவர் மன்றம், தமிழ் எழுத்தாளர் மன்றம், தமிழ் நாடக மன்றம், இசை மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த பயிலரங்கில் எழுத்தாளர் மதுரா, எழுத்தாளர் நெல்லை கவிநேசன் ஆகியோர் மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் பயிற்சி அளித்தனர். 



கல்லூரி முதல்வர் டாக்டர்.து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர்.கு.கதிரேசன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி செயலர் டாக்டர்.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர்.எழிலி அறிமுக உரையாற்றினார். 


40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி ஆண்டு மலர்க்குழு நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 


இப்போட்டிகளை ஆண்டு மலர்க்குழு பொறுப்பாளர் திரு.ராஜன் ஆதித்தன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர். ராஜேஷ் நன்றி கூறினார். 

பேராசிரியை டாக்டர்.மகேசுவரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நன்றி: தினத்தந்தி.

Post a Comment

புதியது பழையவை