விதவிதமாய் வணிகப்பட்டப் படிப்புகள்
புத்தகத்தைப்பற்றி…
உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. உலகமயமாக்கல் என்னும் இந்தியப் பொருளாதார கொள்கை உலகத்தையே ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து விட்டது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவைகள் மிகப்பெரிய தாக்கத்தை இந்திய வணிகத்துறையில் ஏற்படுத்திவிட்டது. இதன் காரணமாக இன்று வணிகப் படிப்புகளுக்கு மிக அதிக வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கிவிட்டது. இதனால், வணிகப் படிப்புகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை இளம்வயதிலேயே தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
வணிகப் படிப்புகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சில முக்கியப் படிப்புகளைப்பற்றியும், வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறந்த படிப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக அமையும். இததைக் கருத்தில்கொண்டு “விதவிதமாய் வணிகப் பட்டப்படிப்புகள்” என்னும் இந்தநூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் படிப்புமுதல் மிக உயர்ந்த மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ. படிப்பு பற்றியும் விரிவான தகவல்களை இந்நூல் விளக்குகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தத்துறையை தேர்ந்தெடுத்து மேற்படிப்பு படித்தால் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையை இந்நூல் நிச்சயம் வழங்கும். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமல்லாமல், எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மாணவர்கள்கூட இந்தப்படிப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்வதன்மூலம் சிறந்த பலனைப் பெறலாம். பெற்றோர்களுக்கும் இந்தநூல் ஒரு வழிகாட்டியாக அமையும். வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை அடைய விரும்பும் எல்லா உள்ளங்களுக்கும் "விதவிதமாய் வணிகப்படிப்புகள்" என்னும் நூல் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக விளங்கும்.
கருத்துரையிடுக