கர்ணன் இங்கே...

கர்ணன் இங்கே...
-நெல்லை கவிநேசன்

கர்ணனைநாம் பார்த்ததில்லை; அய்யா உங்கள்
கருணைதரும் வடிவினிலே கர்ணன் பார்த்தோம்;
தர்மத்தை எம்கண்ணால் கண்ட தில்லை; 
  தர்மதுரை நின்உருவில் தர்மம் கண்டோம்;
‘அர்ப்பணிப்பு’ என்பதுவே விளங்க வில்லை;
  அருள்வடிவே உம்செயலால் விளக்கம் பெற்றோம்
சொர்க்கத்தை அறிந்ததில்லை; உங்கள் நினைவால்
  சுகமான சொர்க்கத்தை அறிந்து கொண்டோம்

திருப்பணிகள் எவையென்று திகைத்து நின்றோம்
  திருச்செந்தூர் தேர்தொட்டீர்; புரிந்து கொண்டோம்
கருத்துக்கள் அறியாமல் வாடி நின்றோம்
  கருத்துதரும் தினத்தந்தி தந்து விட்டீர்
தெருவெங்கும் ‘தமிழ்முழக்கம்’ காணச் செய்தீர்
  தித்திக்கும் கல்விமழை பொழிந்து விட்டீர்
அருள்மணக்கும் வெள்ளையுடை உங்கள் நெஞ்சை
  அற்புதமாய் படம்பிடித்து எளிமை காட்டும்

தினத்தந்தி; மாலைமலர்; ராணி முத்து 
  தினந்தோறும் விருந்துதரும்; தமிழர் தந்தை
இனமென்ற பெருமைதரும்; சின்ன அய்யா
  இருக்கின்ற நினைவுதரும்; இளைய அய்யா 
மனமெங்கும் நிதம்பரவி இனிமை சேர்க்கும்;
  மகிழ்வான உயர்தரும்; குட்டி அய்யா
தினந்தோறும் வெற்றிபெற வழிகள் சொல்லும்;
  திருச்செந்தூர் முருகனருள் வெற்றி நல்கும்.

(நெல்லை கவிநேசன் எழுதி 'மாலைமலர்' இதழில் வெளியான கவிதை)

1. இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் (1961-1971), தெட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவரும், நெல்லை கவிநேசனின் அன்புத் தந்தையுமான திரு.நா.சௌந்தரபாண்டியனார் Ex.M.L.A., அவர்கள், செம்மனச் செம்மல் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்யும் காட்சி.

2.ஆதித்தனார் கல்லூரியில் 3 ஆண்டுகள் பி.பி.ஏ. படிக்கவும், 33 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றவும் அருமையான வாய்ப்பை வழங்கிய அய்யா அவர்களுக்கு அன்பைத் தெரிவிக்கும் நெல்லை கவிநேசன்.


3.அன்பிற்கும், பண்பிற்கும் இலக்கணமாய் திகழும் அய்யா அவர்கள் சான்றோர் மலர் இதழ் வெளியீட்டு விழாவில் நெல்லை கவிநேசனுக்கு ஆசி வழங்கிய நிகழ்வு.

Post a Comment

புதியது பழையவை