சிவகங்கையில் நடைபெற்ற மேற்படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில்
நெல்லை கவிநேசன்
நெல்லை கவிநேசன்
சிவகங்கையில், மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் பத்மராஜம் கல்வி குழுமம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திரு.ஏ.பாலுமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் திரு.ஜெ.ஜெயகாந்தன் தலைமைத் தாங்கிப் பேசினார். அவர் பேசும்போது - “வெற்றி என்பது எப்போதும், எல்லோருக்கும் கிடைக்க காத்திருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும். வெற்றி தானாகவே வந்துவிடும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகியவை நன்றாக இருந்தால் போதும். நாம் மென்மேலும் உயரலாம்” - என குறிப்பிட்டார்.
அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் திருமதி.தி.தனலெட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராஜேந்திரன், ஆக்ஸ்வர்ட் பள்ளிகளின் தாளாளர் திருமதி.சியாமளா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பத்மராஜம் கல்விக்குழுமத்தின் தலைவர் திரு.ப.பாலன் “விதவிதமாய் வணிகப் படிப்புகள்” என்ற தலைப்பில் விளக்கவுரை ஆற்றினார்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் பேராசிரியர்.டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “மனஅழுத்த மேலாண்மை” (STRESS MANAGEMENT) என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை டாக்டர்.புலவர்.வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில், திரு.டி.என்.அன்புத்துரை நன்றி கூறினார்.

கருத்துரையிடுக