ராமநாதபுரத்தில்
கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
ராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் மதுரை, பத்மராஜம் கல்விக்குழுமம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு.வீரராகவராவ் அவர்கள் தலைமைத்தாங்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.ராஜாகுமரன் சேதுபதி அவர்கள், மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலாளர் திருமதி.ராணி லெட்சுமி நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) திரு.முத்துசாமி அவர்கள், வரவேற்புரை வழங்கினார்கள்.
பத்மராஜம் கல்விக்குழுமத் தலைவர் திரு.ப.பாலன் அவர்கள் “விதவிதமாய் வணிகப் படிப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
ஏ.சி.சி.ஏ. தென் இந்திய மண்டல மேலாளர் திரு.பி.சரவணக்குமார் அவர்கள் சர்வதேச அளவில் வணிகவியல் துறையின் படிப்புகள்பற்றி உரையாற்றினார்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் “நேர மேலாண்மை” பற்றி தன்னம்பிக்கையுரை நிகழ்த்தினார்.
நிழ்ச்சியை ஒருங்கிணைத்த புலவர்.டாக்டர்.வை.சங்கரலிங்கம் அவர்கள் மாணவ-மாணவிகள் மகிழ்வோடு பாடங்களைப் படிப்பதற்கான வழிமுறைகளைக் கூறினார். அவரின் நகைச்சுவை துணுக்குகள் மாணவ-மாணவிகளை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டியது.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழாசிரியர் திரு.ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்கள்.
கருத்துரையிடுக