மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் 

புளியங்குடியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை மற்றும் வணிகவியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் “தொழில் வழிகாட்டுதலும் வேலைவாய்ப்பை உருவாக்குதலும்” என்ற தலைப்பில் (07.08.2019) அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.S.சுவாமிதாஸ் தலைமையுரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் K.வளர்மதி வரவேற்புரை வழங்கினார். 

இக்கருத்தரங்கத்தின் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் முனைவர்.S.நாராயணராஜன்  என்ற நெல்லை கவிநேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


அதில், மாணவ-மாணவிகளுக்கு தொழில் தொடங்குவது தொடர்பான பல கருத்துகளையும், மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்பை எவ்வாறு பெற வேண்டும்? என்பதைப்பற்றியும், அவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக, பல எடுத்துக்காட்டுகளுடன் சில வீடியோ பதிவுகளுடன் விளக்கிக் காட்டினார். மேலும் - மாணவ-மாணவிகள் கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். 

குறிப்பாக - பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுதல், அனுபவ அறிவு, இதர செயல்பாடுகள், விளையாட்டு மற்றும் தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், நூலகம் மற்றும் படிக்கும் பழக்கம், சோதனைக்கூடத்தைப் பயன்படுத்துதல், தகவல் தொடர்புத்திறன், புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவைப்பற்றியும் சிறப்புரையாற்றினார்.

மேலும், விழாவில் கலந்துகொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினரான, திருவனந்தபுரம் கூட்டுறவு மேலாண்மைத்துறை துணை இயக்குநர் முனைவர். A.சுப்பிரமணியன் கருத்தரங்க தலைப்பு சார்ந்த பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். 







விழாவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

இவ்விழாவினை வணிக நிர்வாகவியல் துறைப்பேராசிரியை திருமதி.S.சிதம்பரசெல்வி தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் பேராசிரியர்.R.கணேசன் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

புதியது பழையவை