தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வுக்குழு கூட்டம்

தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வுக்குழு கூட்டம்





பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சேவியர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (Xavier Institute of Business Administration) [XIBA] சார்பில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆய்வுக்குழு சார்பில் (Doctoral Committee) திருச்செந்தூர் ஆதித்தனார் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் M.B.A., Ph.D., என்ற நெல்லை கவிநேசன் கலந்துகொண்டார். 

டாக்டர் பட்டத்திற்கான (பி.எச்.டி.) ஆய்வுக்கான கேள்விகளை தயாரிப்பது எப்படி? ஆய்வறிக்கை எழுதுவதற்கான யுக்திகள் (Strategy) போன்றவைகள்பற்றி நெல்லை கவிநேசன் விளக்கினார். இந்நிகழ்ச்சியை பேராசிரியை டாக்டர்.சங்கீதா நெறிப்படுத்தினார். 

ஆய்வு மாணவியும், சங்கரன்கோவில் மனோ கல்லூரி பேராசிரியையுமான பாலசரஸ்வதி ஆய்வுக்குழுவின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டார். முன்னதாக, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சேவியர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் இயக்குநர் அருட்தந்தை.டாக்டர்.கி.மைக்கேல் ஜான் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். 

Post a Comment

புதியது பழையவை