முன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர்

முன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 31 வருடங்களுக்குமுன்பு (1988 ஆம் ஆண்டு) பி.பி.ஏ. படித்த மாணவர் திரு.J.கோபாலகிருஷ்ணன். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மார்க்கெட் ரோடு 54ஆம் இலக்கத்தில் பிரபல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்னும் மளிகைக்கடையை நடத்தி வருகிறார். 

சிறு வன பொருட்களான - சீயக்காய், கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், சீமார்புல், கல்பாசம், குறுமிளகு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை - போன்றவற்றை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார். 

இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசனின் அன்புக்குரிய முன்னாள் மாணவர். 31 ஆண்டுகளுக்குப்பிறகு நெல்லை கவிநேசனிடம் தொடர்புகொண்டு தனது மகன் ஜி.தருண் ரித்திக் எதிர்கால கல்விபற்றியும், ஐ.ஏ.எஸ். கனவுபற்றியும் விளக்கம் கேட்டார். தொலைபேசிமூலம் விளக்கம் கேட்டார். 

கடந்த 21.08.2019 அன்று ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறைக்குத் தனது மகனோடு வந்த திரு.J.கோபாலகிருஷ்ணன் வணிக நிர்வாகவியல்துறை மாணவர்களிடம் கலந்துரையாடினார். 

“வணிகத்தில் வெல்வது எப்படி?” என்னும் தலைப்பில் அவரது உரையும், விளக்கமும் மாணவர்களை மிகவும் கவர்ந்தது. 

சிறப்பு கருத்துரை (Guest Lecture) நிகழ்வுக்கு நெல்லை கவிநேசன் தலைமைத் தாங்கினார். மூத்த பேராசிரியை டாக்டர்.அ.அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் தர்மபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்கள். “இந்த நிகழ்ச்சி எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் கூறியது நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடையாளமாகத் திகழ்கிறது. 




Post a Comment

புதியது பழையவை