திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் விழா
பள்ளி-கல்லூரிகளில் ராக்கிங் கொடுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. இந்தச்சூழலில் புதிய மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, இன்முகத்தோடு வரவேற்கும் ஒரு இனிய விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.  

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் புதிய மாணவர்களை வரவேற்கும் விழா (FRESHERS DAY) கொண்டாடப்பட்டது. 

வணிக நிர்வாகவியல் துறையில் பி.பி.ஏ., இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவுக்கு வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) தலைமைத் தாங்கினார். மூன்றாமாண்டு மாணவர்களின் வகுப்பு ஆலோசகரும், பேராசிரியருமான டாக்டர்.அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார். இரண்டாமாண்டு வகுப்பு ஆலோசகர் பேராசிரியர் டி.செல்வக்குமார், முதலாமாண்டு வகுப்பு ஆலோசகரும்,பேராசிரியருமான டாக்டர்.எம்.ஆர்.கார்த்திகேயன், பேராசிரியர் தர்மபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை வழிநடத்தினார்கள். விழாவில் துறை நூலகர் M.முத்துக்குமார் கலந்துகொண்டார்.

விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய விவரங்களை விளக்கமாக மேடைக்குவந்து தெரிவித்தார்கள். இந்த மாணவர்களின் எதிர்காலத் திட்டம் தொடர்பான கேள்விகளை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கேட்டு அவர்களை நெறிப்படுத்தும் வழிகளையும் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். 

முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களும் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அனைவரையும் மகிழ்வித்தார்கள். விழாவுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக மாணவர்கள் அதிபன், ராஜா, பிரேம்குமார் ஆகியோர் செயல்பட்டார்கள். 




Post a Comment

புதியது பழையவை