அகழாய்வு நாயகன்
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு “அகழாய்வு நாயகன் விருது” வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திரு.திருமலை நம்பி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி திரு.ராஜேந்திரன், தொலைதொடர்புத்துறை திரு.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் திரு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு “அகழாய்வு நாயகன்” என்ற விருது வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணன், மணக்கரை தபால் அதிகாரி திரு.காளிமுத்து, திரு.செல்லப்பா, திரு.செந்தில், திரு.ஜீவா, ஓய்வுபெற்ற தபால்காரர் திரு.செல்லப்பா, உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆணையாளர் திரு.பாலசுப்பிரமணியன் நூலக புரவலராக சேர்ந்து கொண்டார். நூலகர் திரு.துரைராஜ் நன்றி கூறினார்.
கருத்துரையிடுக