மதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா

மதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா

அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை வரவேற்கும் மகிழ்ச்சி திருவிழா, விலையில்லா நோட்டுபுத்தகம் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா, மரக்கன்று நடுவிழா, “வெற்றி உங்கள் கைகளில்” நூல் வெளியீட்டுவிழா ஆகிய விழாக்கள்  திருவள்ளுவர் அரங்கில் நடந்தது.

இந்த விழாவிற்கு தினத்தந்தி தலைமை பொதுமேலாளர் திரு.தனஞ்செயன் தலைமைத்தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் டாக்டர். திரு.எம்.கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அரிமா ஆளுநர்கள் திரு.கண.நாகராஜன், திரு.முருகேசன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு.பாரிபரமேஸ்வரன் ஐ.பி.எஸ்., டாக்டர் திரு.இஸ்மாயில், திரு.வாசவி ரவிச்சந்திரன், திரு.பெரிஸ் மகேந்திரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் திரு.கலைச்செல்வி வரவேற்றார். இந்தவிழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு.சுபாஷினி, மாவட்டகல்வி அலுவலர் திரு.திலகவதி ஆகியோர் மரக்கன்றுகளை நடவுசெய்து விலையில்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

முன்னாள் காவல்துறை தலைவர் திரு.பாரி, பெனிட் அன்ட் கோ உரிமையாளர் திரு.பெனிட்கரன் ஆகியோர் 4 பீரோக்கள், 20 மின்விசிறிகள் உள்ளிட்ட உபகரண நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

அன்னை பாத்திமா கல்வி நிறுவனத் தலைவர் திரு.ஷா  6முதல் 12வகுப்புவரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்த விழாவில் புலவர் திரு.வை.சங்கரலிங்கம் மற்றும் திரு.நெல்லை கவிநேசன் ஆகியோர்  எழுதிய “வெற்றி உங்கள் கைகளில்” என்னும் தன்னம்பிக்கை நூல் வெளியிடப்பட்டது.

மாற்றுத்திறனாளி திரு.ஷியாம் தன்னம்பிக்கை பாடல் பாடினார்.  இதில் திரு.நெல்லைகவிநேசன், சுங்கதுறைகண்காணிப்பாளர் திரு.நன்னிலம் கேசவன், சேலம் வழக்கறிஞர் திரு.ஜெயராஜன், சென்னை பேராசிரியை காயத்ரி, திரு.கட்டக்கால் கோவிந்தராஜன், கவிஞர்கள் திரு.திருநாவுகரசு, திரு.மு.ரா.குகசீலரூபன், திரு.பொன்கலைதாசன், தாசில்தார்கள் திரு.பார்தீபன், திரு.முத்துராமலிங்கம், திருவள்ளுவர் இலக்கியமன்ற தலைவர் திரு.தனபாலன், கலைமாமணி திரு.தவமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் புலவர் திரு.வை.சங்கரலிங்கம் நன்றி கூறினார்.



நிகழ்வுப் புகைப்படங்கள்







Post a Comment

புதியது பழையவை