மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்த தமிழறிஞர்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்த தமிழறிஞர்கள்

நெல்லை பல்கலையில் பாரதியார் சிந்தனை படிப்புகள் துணைவேந்தர் டாக்டர்.கே.பிச்சுமணி உறுதி. நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா.எட்டையபுரத்து எழுத்துச் சித்தன் மகாகவி பாரதியின் சிந்தனைகள் அளப்பரியது.  தீர்க்கத்தரிசி, சிந்தனையாளர், பெண் விடுதலை, மண் விடுதலை, சமதர்ம சிந்தனை கருத்துகளை விதைத்த உலககவி.பாரதியின் சிந்தனைகள் உலகமெலாம் பரவிட, நின்று நிலைத்திட, பாரதியார் உலகப் பொதுச் சேவை நிதியம், பாரதியார் உலகப் பொது மன்றத் தலைவர் கல்வியாளர் திரு. அ மரியசூசை, பொதுச் செயலாளர் கவிஞர். முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன், பொருளாளர் திரு.க.வெங்கடாசலம், மற்றும் அமைப்பைச் சார்ந்த திரு.சு.முத்துசாமி, திரு.கே.பி.அருணா சிவாஜி, ஆகியோர் பல்கலையில் பாரதியார் சிந்தனையில் படிப்புகள் தொடங்கிட வேண்டும் என முன்மொழிவினை மரியாதைக்குரிய துணைவேந்தர் டாக்டர் கே.பிச்சுமணி அவர்களிடம் வழங்கினார்கள். நிகழ்வில் பல்கலை கழக நூலகர் டாக்டர் பாலசுப்பிரமணியன், நூலகர் குணசிங் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மரியாதைக்குரிய துணைவேந்தர் டாக்டர் கே.பிச்சுமணி அவர்கள் முன்மொழிவினை வாசித்து கூடிய விரைவில் பாரதியார் சிந்தனை படிப்புகள், ஆய்வுகள் நடந்திட. ஆவண செய்வதாக உறுதியளித்தார். பல்கலை கழக நூலகர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தான் எழுதிய 3 நூல்களை துணைவேந்தரிடம் வழங்கினார்கள்.

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை