நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில்
நெல்லை கவிநேசன்
நெல்லை கவிநேசன்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திருச்செந்தூரை அடுத்த தளவாய்புரம், ஆறுமுகபுரம் மற்றும் புதூர் ஆகிய மூன்று ஊர்களிலும் நடைபெற்றது. இந்த முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 43 திட்ட அலுவலர் டாக்டர்.ச.சுந்தர வடிவேல், நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 43 திட்ட அலுவலர் டாக்டர்.கு.கதிரேசன், நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 48 திட்ட அலுவலர் டாக்டர்.தே.வசுமதி ஆகியோர் இணைந்து 7 நாட்கள் இந்த சிறப்பு முகாமை நடத்தினார்கள்.
26.02.2019 அன்று நடந்த இரண்டாம் நாள் நிகழ்வில் “சுகாதார விழிப்புணர்வு-வேளாண்மை வளர்ச்சி நாள்” கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஊர் பெரியவர்கள் திரு.கனகராஜ், ராமச்சந்திரன், திரு.செல்வராஜ், திரு.சசிகுமார், திரு.கோயில்பிள்ளை, திரு.ஜெயமுருகன், திரு.ராமகிருஷ்ணன், திரு.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.சௌ.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்குப்பின் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் டாக்டர்.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரி செயலர் டாக்டர்.பெ.சுப்பிரமணியம் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கருத்துரையிடுக