திருப்பூர், தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்
“தினத்தந்தி” மற்றும் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி சார்பில் நடந்த “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாக இயல்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) போட்டித் தேர்வுகளும், வேலைவாய்ப்புகளும் என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது - “சிவில் சர்வீசஸ் தேர்வுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அளவில் டி.என்.பி.எஸ்.சி. அமைப்பும் இம்மாதிரியான தேர்வுகளை நடத்துகிறது. இரயில்வே துறை, ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கும் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆண்டுதோறும் 8 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அஞ்சல் வழியில் படித்தவர்களும் இந்தத் தேர்வுகளை எழுதலாம். இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு உள்ளது.
போலீஸ் துறை, இரயில்வே துறை, கணக்குப்பதிவியில் துறை, பாதுகாப்பு துறை ஆகியவற்றில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதலாம். இந்தத் தேர்வை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 9 முறையும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 37 வயதுவரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வை எழுதலாம். முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது ஆளுமைத்தேர்வு நடைபெறும். இந்த 3 நிலைகளிலும் வெற்றி பெற்றால் போதும். முயற்சியுடன் போட்டித் தேர்வுகளை சந்தித்தால் நமக்கு வெற்றி நிச்சயம் - இவ்வாறு பேசினார்.

நன்றி: திருப்பூர் தினத்தந்தி 06.01.2019.
கருத்துரையிடுக