நெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் அமர்ந்து ஆசிகள் வழங்குகிறார் பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.
 
 நெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் M.B.A., Ph.D., (நெல்லை கவிநேசன்) மேலாண்மை துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1995ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் மேலாண்மைத்துறை ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் இணைத்துக்கொண்டு ஆராய்ச்சியைத் தொடங்கிய நெல்லை கவிநேசன் இதுவரை 8 ஆய்வாளர்களுக்கு டாக்டர் பட்ட வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்தியுள்ளார். இவரின் வழிகாட்டலின்மூலம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கிறிஸ்துவ கல்லூரி, வணிக நிர்வாகவில் துறை பேராசிரியர், டாக்டர்.ஜெப மெல்வின், பெங்களூர் பேராசிரியை டாக்டர்.உமா மகேஸ்வரி, கேரள மாநிலம் கொச்சி பேராசிரியர் டாக்டர்.ராஜேஷ், சென்னை பேராசிரியை டாக்டர்.பானிலா, கடையநல்லூர் பேராசிரியர் டாக்டர்.பால் மகேஷ், சென்னை விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர்.செந்தில்குமார், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி பேராசிரியை டாக்டர்.மாலதி கணேசன் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மேலாண்மைத்துறை பேராசிரியர் டாக்டர்.நளினி ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்கள்.

மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜுபிள் மாத்யூ என்பவரும் நெல்லை கவிநேசன் இணை வழிகாட்டுதலோடு (Co-Guide) டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நெல்லை கவிநேசனின் வழிகாட்டுதலில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் திருநெல்வேலி M.H. அரங்கத்தில், சிறப்பு பாராட்டுகள் வழங்கினார்கள். நெல்லை கவிநேசனுக்கும் தங்களுக்குமுள்ள ஆராய்ச்சித் தொடர்புகளை விளக்கிப் பேசினார்கள். முடிவில், ஏற்புரையாக தனது ஆய்வு பயணத்தில் ஆரம்பமும், நிறைவும் எப்படி அமைந்துள்ளது? என்பதை விளக்கினார் நெல்லை கவிநேசன்.

நெல்லை கவிநேசன் தனது ஆராய்ச்சி வெற்றிக்குக் காரணமான இறைவனுக்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் டாக்டர்.அழகப்பன், டாக்டர்.ரவிச்சந்திரன், டாக்டர்.சந்திரன், டாக்டர்.நடேச பாண்டியன், டாக்டர்.சேகர், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர்.சௌந்தர ராஜன், டாக்டர்.ஜெயபாஸ்கரன், டாக்டர்.நாகராஜன், டாக்டர்.மாலைசூடும் பெருமாள், டாக்டர்.பாலகுமார் ஆகியோரையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார். மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர்.ராஜலிங்கம், டாக்டர்.ராஜசேகர், டாக்டர்.மாதவன், டாக்டர்.ரவி, டாக்டர்.மகேஷ் குத்தாலிங்கம், பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்.செந்தில்குமார், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர்.எட்வின், பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிளாண்டேஷன் மேனேஜ்மெண்ட் பேராசிரியர் டாக்டர்.ஜாண் மனோராஜ், ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர்கள் டாக்டர்.மா.பா.குருசாமி, டாக்டர்.செல்வராஜ், டாக்டர்.கோபால கிருஷ்ணன், டாக்டர்.சுப்பிரமணியன் ஆகியோர் தனது ஆராய்ச்சிப் பயணத்தில் அச்சாணியாக அமைந்ததையும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

மேலும், தனது ஆராய்ச்சிப் பயணத்தில் பேரூதவி செய்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் ஆட்சிக்குழுத் தலைவர் பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் தற்போதைய ஆட்சிக்குழுத் தலைவர் திருமிகு.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோரையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார்.
 
இந்த சந்திப்பு நிகழ்வு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்து இதயம் இனிக்கும் சந்திப்பாக அமைந்தது.

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை