திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 5


திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா ஐந்தாம் நாளான வியாழக்கிழமை [14.02.2019] இரவு சிவன் கோயிலில் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் தெய்வானை அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.









திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஐந்தாம் திருநாளான ன்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வுகள்.







 
இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.   

திருச்செந்தூர் - பல பெயர்கள்
கடல் அலைகளால் தவழப்படும் காரணத்தினால் ‘அலை வாய்’ என்றும் ‘திருச்சீரலைவாய்’ என்றும் ‘திருச்செந்தூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஜெயந்திபுரம், செந்தூர் என்றும் திருச்செந்தூருக்கு வேறுபெயர்களும் உண்டு.
ஆலய அமைப்பு
 
திருச்செந்தூர் திருமுருகன் ஆலயத்தின் அமைப்பு முறையை வழிபடும் முறைக்கு ஏற்றவாறு -:
1. நாழிக்கிணறு
2. தூண்டுகை விநாயகர்
3. கிரிவீதி
4. வெளிப்பிரகாரம் (சீபலி மண்டபம்)
5. நடுப் பிரகாரம்
6. உள் பிரகாரம் (மகா மண்டபம்) - எனப் பிரித்துக் கொள்ளலாம்.

கிரி வீதியில் - 
1. திருக்கல்யாண மண்டபம்
2. வசந்த மண்டபம்
3. வள்ளிக் குகை
4. ஆனந்த ஆலாசம்
5. சஷ்டி மண்டபம்
6. சண்முக விலாசம் - ஆகியவை உள்ளன.

வெளிப் பிரகாரத்தில் (சீபலி மண்டபம்) -
1. தட்சிணாமூர்த்தி
2. முக்குறுணிப் பிள்ளையார்
3. வெங்கடேசப் பெருமாள் - ஆகியோர் உள்ளனர்.

நடுப்பிரகாரத்தில் -
1. மௌன சுவாமிகள்
2. காசி சுவாமிகள்
3. தேசிக மூர்த்தி சுவாமிகள்
4. வள்ளியம்மை
5. தெய்வானை அம்மை
6. சண்டிகேஸ்வரர்
7. நடராஜர்
8. சனீஸ்வரர்
9. பைரவர் - ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. யாகசாலை, கொடிமரம் முதலியவையும் இங்கு உள்ளன.

உள் பிரகாரத்தில் (மகா மண்டபம்)  -

1. சுப்பிரமணிய சுவாமி (மூலவர்)
2. சண்முகர்
3. வீரபாகு மூர்த்தி
4. வீர மகேந்திரர்
5. பார்வதி தேவியார்
6. பஞ்சலிங்கங்கள் - ஆகியோர் விக்கிரகங்களும், சந்நிதிகளும் உள்ளன. 

தொடரும்.

Post a Comment

புதியது பழையவை