திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
[Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா 11-ம் நாள் நிகழ்வுகள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா
10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
திருச்செந்தூர் மாசித் திருவிழா 11-ம் நாளான புதன்கிழமை இரவு தெப்பத் [20.02.2019] திருவிழா நடைபெற்றது...
இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களில் -
1. முதல் முகம் - இருள்நிறைந்த உலகத்தில்அதிரொளியைப்பரப்பும் முகம்
2. இரண்டாவது முகம் - பக்தர்களுக்கு வரம் கொடுக்கும் முகம்
3. மூன்றாவது முகம் - அந்தணர்கள் செய்கின்ற யாகத்தைக் காக்கும் முகம்
4. நான்காவது முகம் - ஒளி பொருந்திய சந்திரன் போன்று ஞானத்தை வழங்கும் முகம்
5. ஐந்தாவது முகம் - வீறுகொண்ட திருமுகம்
6.ஆறாவது முகம் - மகிழ்வைத்தரும் முகம்
- எனத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது.

மன்னர்கள் வரும்போது “மன்னர் வருகிறார் பராக் பராக்” என்று சொல்லி, கூடி நிற்கும் மக்களை ‘வழிவிட்டு விலகி நில்லுங்கள்’ என்றும் சொல்லும்வ¬யில் மன்னரின் புகழ் பாடுவதைக் ‘கட்டியம்’ என்பார்கள். மன்னர்களுக்கெல்லாம் மன்னராக, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக விளங்கும் எம்பெருமான் முருகப்பெருமானின் வருகையை விளக்கிக் கூறும்போது இப்படிப் பாடுகிறார்கள்.
திருச்செந்தூர் திருமுருகன் ஆறுமுகங்களைக் காட்டி, பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். இந்த ஆறுமுகங்களின் ஒவ்வொரு முகமும் வெவ்வேறு அருளை பக்தர்களுக்கு வழங்குகிறது.
“பூ வுலகில் நெற்கோடி சூரியன் உதித்தன்ன
பூலவிதரு ஒருதிருமுகம்
பூவெடுத்து அனுதினம் அர்ச்சனை செய்தவருக்கு
பூமியும் ஒருதிருமுகம்
மேவுமுறை நால்வேதம் முறையினோடு வேள்வேள்வி
விளங்கவரும் ஒருதிருமகம்
மேய் பிரணவத்தின் உண்மை தந்தையார்க்கு உபதேசம்
உரைக்கவரும் ஒருதிருமுகம்
மாவாடி விதான சூரனை வென்று தேவர்சிறை
மாற்றவரும் ஒருதிருமுகம்
மலைமீதில் சென்று தேவகுஞ்சரியைத் திருமணம்
புணரவரும் ஒருதிருமுகம்”
- எனப் பட்டியலிட்டுக் கட்டியம் கூறிப் பாடுவது இன்றும் வழக்கமாக உள்ளது.
சேவலரான ஆறுமுக வேலவர் தெருவீதியில் செம்சப்பரத்தில் வரும்பொழுது சேவை செய்தவர். அமரர்தானென அப்புவி மிசைதனில் தினம் தினம் அழியா வரம் பெறுவார்கள். (தகவல்: கட்டியம் சரவண அய்யர், திருச்செந்தூர்).

தொடரும்.
கருத்துரையிடுக