திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
[Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா
10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா கொடியேற்றம் [10.02.2019] முதல் நாள் நிகழ்வுகள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
மாசித்திருவிழாவானது ஞாயிற்றுக்கிழமையன்று [10.02.2019] கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு
நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட
அபிஷேகமாகி, காலை 5.20 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் காப்புக்
கட்டிய இலஞ்சி சண்முகம் பட்டர் திருவிழா கொடியினை ஏற்றினார். தொடர்ந்து
கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, 6.30 மணிக்கு மகா தீபாராதனை
நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்
கொடியேற்றும்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு அரோகரா என்று பக்தி கோஷத்துடன்
கொடியேற்றப்பட்டது
இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களையும் அவற்றுக்கான காரணங்களையும் காண்போம்.
1. குமரன் - இளமைத் தோற்றம் கொண்டவர்
2. வேலன் - வேலாயுதத்தை ஏந்தியவர்
3. கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்
4. சண்முகன் - ஆறுமுகங்கள் கொண்டவர்
5. சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவர்
6. தணிகாசலம் - தணிகை மலையில் வீற்றிருப்பவர்
7. சுவாமிநாதன் - தனது தந்தையான சிவனுக்கு உபதேசித்தவர்
8. சேவற்கொடியோன் - சேவலைக் கொடியாகக் கொண்டவர்
9. வள்ளிமணாளன் - வள்ளியை மணந்தவர்
10. தண்டாயுதபாணி - தண்டத்தை ஆயுதமாகக் கொண்டவர்
11. கடம்பன்-கடம்ப மாலையை அணிந்தவர்
12. விசாகன் -விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்
13. கந்தன்-ஆன்மாக்களுக்கு பற்றுக் கோடானவர்
14. உமாசுதன் - உமையம்மைக்கு விருப்பமானவர்
15. அரன்மகன் - சிவபெருமானின் புதல்வர்
16. குகன் - மனக்குகையிலிருந்து காப்பவர்
17. செவ்வேள் - விரும்பப்படுபவர் (கருவேள் - மன்மதன்)
18. குஞ்சரி மணாளன் - தெய்வானை எனப்படும் தேவகுஞ்சரியைத் திருமணம் செய்து கொண்டவர்
19. காங்கேயன் - கங்கையில் பிறந்தவர்
20. மயில் வாகனன் - மயில் வாகனத்தை உடையவர்
21. ஞான பண்டிதன் - ஞானமே வடிவெடுத்தவர்
தொடரும்.
Valthugal sir
பதிலளிநீக்குகருத்துரையிடுக