பரிசும், பாராட்டும் புகைப்படங்கள் (Award Photos)

பரிசும், பாராட்டும் புகைப்படங்கள்


1.ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகா சுவாமிகள் 123வது ஜெயந்தி விழாவில் நெல்லை கவிநேசனுக்கு “ஸ்ரீ மகா சுவாமிகள் விருது" வழங்கப்பட்டபோது.
விருது வழங்கியவர் : ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
(கல்வி மற்றும் சமூகப்பணியில் சிறந்து விளங்கி சாதனைகள் பல புரிந்து சேவைகள் செய்து வருவதற்காக)
 


 



2.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாதனைச் செல்வர் என்ற பட்டத்தை நெல்லை கவிநேசனுக்கு வழங்கி நெல்லை கவிநேசன் எழுதிய “நீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்" என்னும் நூலை வெளியிட்டார். (பல்வேறு மாணவ-மாணவிகளை சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற தன்னம்பிக்கையூட்டி பெருமை சேர்த்தமைக்காக “சாதனைச் செல்வர் விருது" வழங்கப்பட்டது.




3.நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி அவர்கள் “சிறந்த எழுத்தாளருக்கான விருதை" நெல்லை கவிநேசன் அவர்களுக்கு வழங்கி பாராட்டுகிறார். பாளையங்கோட்டை பொது நூலகத்தில் நடந்த விழாவில் கவிஞர் கணபதி சுப்பிரமணியம் மற்றும் இலக்கிய அன்பர்கள் பலர் கலந்துகொண்டார்கள். 

 



4.கவிதை உறவு இதழின் சார்பில் சிறந்த தன்னம்பிக்கை நூலாக நெல்லை கவிநேசன் எழுதிய “மாணவர்கள் பிரச்சினைகள் தீர்வுகள்" புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் கவிதை உறவு ஆசிரியர் திருமிகு.ஏர்வாடி எஸ்.ராதாகிரு~;ணன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர். பரிசு வழங்குகிறார் பிரபல அரசியல் ஆளுமை திருமிகு இல.கணேசன்.

 



5.ஜோதிட அரசு மாத இதழ் சார்பில் “வேலை வாய்ப்பு வேந்தர்" என்ற பட்டம் நெல்லை கவிநேசன் அவர்களுக்கு வழங்கியமைக்கான சான்றிதழ்.

 


6.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, நெல்லை கவிநேசன் எழுதிய “வெற்றி தரும் மேலாண்மை" என்னும் நூலை “மிகச்சிறந்த நூல்" என தேர்ந்தெடுத்து 2018ஆம் ஆண்டு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்துள்ளது. நெல்லை கவிநேசனுக்கு பரிசு வழங்குகிறார் தமிழக அமைச்சர் திருமிகு.மாஃபா.பாண்டியராஜன் அவர்கள்.
 



 


7.தமிழ்நாடு இதழ்கள் பதிப்பாளர் சங்கம் நெல்லை கவிநேசன் அவர்களின் எழுத்துப் பணியைப் பாராட்டி “பயனெழுத்துப் படைப்பாளி" என்ற விருதை வழங்கியுள்ளது. துணைவேந்தர் பொன்னவைக்கோ பரிசு வழங்குகிறார். வளர்தொழில் ஆசிரியர் திரு.ஜெயகிருஷ்ணன் அவர்கள் மகிழ்ந்து பாராட்டுகிறார்.
 

 


8.மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “சிறந்த இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்” (Youth Red Cross) விருதை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அதிகாரி சௌ.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) துணைவேந்தர் அவர்களிடமிருந்து விருதினை பெறுகிறார்.
 

Post a Comment

புதியது பழையவை