திருச்செந்தூர் முருகன்


புத்தகத்தைப்பற்றி…

அறுபடை வீடு அழகனான திருச்செந்தூர் முருகன் அனைவரது மனதிலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அள்ளித்தரும் இறைவன். நாடி வருபவர்களுக்கு ஓடிவந்து நன்மை செய்யும் தெய்வம். சாதாரண நிலையில் இருந்தவர்களைக்கூட சரித்திரம் படைப்பவர்களாக மாற்றும் அளவுக்கு சக்தி கொடுக்கும் திருக்குமரன்.

வரங்களை அள்ளி வழங்கி திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகன் பற்றிய தகவல்களை “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநூலில் திருமுருகனின் திருஅவதாரங்கள், அறுபடை வீடுகள், சீர்மிகு திருச்செந்தூர், ஆலய அமைப்பு-விளக்கம், வழிபடும்முறை, திருச்செந்தூர் முருகன் மகிமைகள், தினசரி வழிபாட்டு நேரங்கள், மாதச்சிறப்பு வழிபாடுகள், ஆண்டு திருவிழாக்கள், சிறப்புக் கட்டளைகள், திருச்செந்தூர் கோவில் தங்கும் விடுதிகள், வாடகை விவரங்கள், திருச்செந்தூர் தனியார் லாட்ஜ் முகவரிகள், தொடர்பு எண்கள், ஆலய தொடர்பு விவரங்கள் ஆகிய அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய இனிய நூல் இது.

பக்தகோடி பெருமக்கள் செந்தில் பதிவாழ் செல்வக்குமரன் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து முறையாக வழிபடும் வகையில் இந்நூலை விளக்கமாக பேராசிரியர் நெல்லை கவிநேசன் வடிவமைத்து வழங்கியுள்ளார். இந்நூல் படிப்பவர் மனதில் பக்திச்சுவையை மட்டுமல்ல, தன்னம்பிக்கையை வளர்க்கும் தத்துவ உபதேசமாகவும் உள்ளது.

விலை: ரூபாய். 40/-

Post a Comment

புதியது பழையவை