புத்தகத்தைப்பற்றி…
நல்ல எழுத்தாற்றல் என்பது ஒவ்வொரு வாசகர்களின் நெஞ்சில் தன்னம்பிக்கையைத் துளிர்க்கச் செய்வதுடன், விழிப்புணர்வுக்குத் தூண்டுவதாக அமைந்த எழுத்துக்களை உருவாக்கும் எழுத்தாளர்களின் திறன் ஆகும்.
“எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்“ என்ற தாரக மந்திரத்தை மூச்சுக் காற்றாய்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் நெல்லை கவிநேசன், ஏழாவது அறிவான அனுபவக் கல்வியைக்கொண்டு “மாணவர்கள் பிரச்சினைகள் தீர்வுகள்” என்ற தலைப்பில் தமிழ்ச் சமுதாய இளம்தலைமுறையினரின் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார்.
தங்கள் தோல்விகளுக்கு தாங்களே காரணம் என பல மாணவ உள்ளங்கள் நினைத்து வருந்தி தங்கள் வாழ்க்கையை இளமையிலேயே முடித்துக்கொள்கிறார்கள். அவர்கள், தங்களின் உண்மையான பிரச்சினை என்பது என்ன? அதற்கு எது சரியான தீர்வு? என்பதை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். மாணவ-மாணவிகளின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இந்த நூலை காலமறிந்து படைத்துள்ளார் நெல்லை கவிநேசன் அவர்கள்.
இந்நூலில், படிக்கத் தொடங்குவோம், படிப்பது எப்படி? படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? என்பவற்றிற்கு விடை காண்பதோடு, இவற்றிற்குத் தடைக்கற்களாகத் திகழும் ‘மன அழுத்தம்‘, ‘டீன் ஏஜ் பிரச்சினைகள்’, ‘வறுமை’, ‘மன ஒருமைப்பாடு பிரச்சினைகள்’ போன்றவற்றை உடைத்தெறியும் உளியாகத் தீர்வுகளைத் தந்துள்ளார்.
இவர், கல்லூரிப் பிரச்சினைகளில் கவனம் தேவை, உறவை வளர்க்கும் உறவுமுறைகளை தன் பட்டறிவுடன் கட்டுரைகளுக்கு ஏற்ற படங்களையும்தந்து மாணவரிடையே கருத்துப் புரட்சி செய்துள்ளார். பிரச்சினைகளை எடைபோட்டுப் பார்த்து, அவைகளைத் தரம்பிரித்து தனித்துவத்துடன் தீர்வு கண்டுள்ள சமூக விஞ்ஞானி, நெல்லை கவிநேசன் அவர்களின் எழுத்துப்பணி இமயத்தை நோக்கிச் செல்வதற்கு இந்த நூல் அடையாளமாக அமைகிறது.
விலை : ரூபாய் 50/-

கருத்துரையிடுக