புத்தகத்தைப்பற்றி…
32 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியப் பணியின் அனுபவம் காரணமாக மாணவ-மாணவிகள் - பெற்றோர்கள் - ஆசிரியர்கள் என பலரின் மனநிலையையும் கனகச்சிதமாக படம்பிடித்து பயன்மிக்க, மாணவ சமுதாயத்திற்கு பலன்தரும் கருத்துக்களை தனது தனிநடைத் தமிழில் சிறப்புற தந்திருக்கிறார் நூலாசிரியர் நெல்லை கவிநேசன் அவர்கள்.
“இளம்பருவத்தில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளை நற்பண்புகள் கொண்டவர்களாக, மாற்றிவிட்டால் இந்தியாவை உலக அரங்கில் சிறந்த நாடாக மாற்றிவிடலாம்” என்கிற ஆசிரியரின் நம்பிக்கையின் வெளிப்பாடாக, மாணவ-மாணவிகள் படிக்கின்ற காலத்தில் நல்ல பண்ணை பெறுவதற்கான வழிமுறைகள், சிறப்புத் திறன்களை வளர்ப்பதற்கான உத்திகள் என்று நூல் முழுக்க தவறான வழிகளை சுட்டிக்காட்டியும், சரியான வழிகளை எடுத்துக்காட்டியும் இருக்கிறார் நூலாசிரியர். வாழ்க்கையை நியாயப்படுத்தும் சிந்தனைகள் எழுந்திடவும், வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் செயல்கள் உருவாகிடவும் தூண்டுகிற எழுத்தாற்றல் பெற்றவர் நெல்லை கவிநேசன் அவர்கள். மொத்தம் 20 கட்டுரைகள் வித்தியாசமான தலைப்பில் இடம்பெற்றுள்ளன.
கல்லூரி கனவுகள், படிக்காத பாடங்கள், பயிற்சிகள்-பரிதாபங்கள், மாற்றங்கள் ஏமாற்றங்கள் அல்ல..., ஒய் திஸ் கொலைவெறி, கையாள தெரியாத கருவிகள் போன்ற தலைப்புகள் முத்திரைப் பதிக்கும் தலைப்புகளாக இடம்பெற்றுள்ளன.
விலை: ரூபாய். 120/-
கருத்துரையிடுக