நீங்களும் கலெக்டர் ஆகலாம்


புத்தகத்தைப்பற்றி…
ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ்.போன்ற உயர்பணிகளில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய “நீங்களும் கலெக்டர் ஆகலாம்” என்னும் தொடர் தினத்தந்தி இளைஞர் மலர் இதழில் 2000ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

50 வாரங்களாக தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்தத் தொடர் கட்டுரை,தமிழக இளைஞர்களிடம் மிகப்பெரிய மனமாற்றத்தை உருவாக்கி,ஐ.ஏ.எஸ்.கனவை பலரின் மனதில் விதைத்தது.வாரந்தோறும் வாசகர்களின் பாராட்டைப்பெற்ற இந்த நல்ல தொடர் கட்டுரைகளை தொகுத்து முதன்முதலில் 2003ஆம் ஆண்டு “நீங்களும் கலெக்டர் ஆகலாம்” என்னும் நூல் வடிவில் கொண்டுவந்தவர்கள் குமரன் பதிப்பகத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநூலைப் படித்து ஏராளமான இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பற்றிய விழிப்புணர்வு 2000ஆம் ஆண்டுக்குமுன்பு அதிகமாக இல்லை. இந்தக்குறையை நீக்கும் விதத்தில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் அவர்களை  வாரந்தோறும் ஐ.ஏ.எஸ்., தேர்வு பற்றிய தகவல்களை எழுதவைத்து தினத்தந்தி வெளியிட்டது. இதன்விளைவாக இன்று அதிகமான எண்ணிக்கையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று வருகிறார்கள்.

“நீங்களும் கலெக்டர் ஆகலாம்” என்னும் இந்த நூலில் சிவில் சர்வீசஸ் தேர்வு, முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, விருப்பப் பாடத்தை தேர்வு செய்வது எப்படி?, நேர்முகத்தேர்வு, பயிற்சி மையங்கள், தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள் ஆகிய முக்கிய தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

விலை: ரூபாய்.60/-



Post a Comment

புதியது பழையவை