புத்தகத்தைப்பற்றி…
“அரசு வேலை” என்பது இன்றைய இளைய உள்ளங்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான (Competitive Examinations) எழுத்துத்தேர்வினை (Written Examination)சிறப்பாக எழுதும் பலர் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். இருப்பினும், அதன்பின்னர் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் சிலர் வெற்றியடைவதில்லை.
இப்போதெல்லாம் - இந்திய இராணுவம் (Indian Army), இந்திய கப்பற்படை (Indian Navy), இந்திய விமானப்படை (Indian Airforce) ஆகிய படைகளில் தரமான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் ‘சர்வீசஸ் செலக்ஷன் போர்டு’ (Services Selection Board) நேர்முகத்தேர்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நேர்முகத்தேர்வின் நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொண்டு சிறப்பான தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற இயலும்.
எஸ்.எஸ்.பி. நேர்முகத்தேர்வில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறுவதற்கு உதவியாகவும், நேர்முகத் தேர்வின் நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டும் வகையிலும் “SSB இண்டர்வியூ வெற்றிக்கான வழிகள்” என்னும் நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாதுகாப்புப் படையில் சேருபவர்களுக்கு மட்டுமல்லாமல், நேர்முகத் தேர்வை சந்திக்கும் எல்லா போட்டியாளர்களுக்கும் மிகவும் உறுதுணையாக அமையும். பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே நேர்முகத்தேர்வின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டால், எல்லாவிதமான போட்டித்தேர்விலும் எளிதில் வெற்றி பெறலாம்.
இந்நூலில் எஸ்.எஸ்.பி. இண்டர்வியூ தேர்வு அமைப்பு, முதல்நாள் நிகழ்வுகள், முதல்நாளில் இடம்பெறும் தனிநபர் தகவல் கேள்வித்தாள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், இரண்டாம் நாள் நிகழ்வுகளில் இடம்பெறும் புத்திக்கூர்மைத் தேர்வுகள் (வெர்பல்-நான்வெர்பல்) (Intelligence Test (Verbal-Non Verbal),வார்த்தைத் தொடர்புத் தேர்வு (Word Association Test),பொருள் உணர்தல் தேர்வு (Thematic Apperception Test), சூழல் எதிர்விளைவுத் தேர்வு (Situation Reaction Test), தன்மதிப்பீட்டுத் தேர்வு (Self Appraisal Test) ஆகிய தேர்வுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் மற்றும் நான்காம் நாள் தேர்வில் இடம்பெறும்-குழு விவாதம் ((Group Discussion), குழுத் திட்டமிடல் பயிற்சி (Group Planning Exercise), மேம்பாட்டுக்குழுப் பணித்தேர்வு (Progressive Group Task), குழுத் தடை ஓட்டத்தேர்வு (Group Obstacle Race), தனிநபர் தடை ஓட்டத்தேர்வு (Individual Obstacle Race), விரிவுரை செய்தல் தேர்வு (Lecturette), சமபங்கு குழுப்பணித்தேர்வு (Half Group Task), ஆணையிடும் பணித்தேர்வு (Command Task), நிறைவுக் குழுப்பணித்தேர்வு (Final Group Task) ஆகிய தேர்வுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இவைதவிர, நேர்முகத்தேர்வுக் கேள்விகள் வகைகள்- நேர்முகத்தேர்வில் இடம்பெறும் போட்டியாளருக்கான முக்கியப் பண்புகள், நேர்முகத் தேர்வுக்கான தயாரிப்பு, நேர்முகத் தேர்வின்போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் நாள் நிகழ்வுகளில் இடம்பெறும் நிறைவு உரை (Closing Address),கருத்தரங்கு (Board Conference), முடிவுகள் அறிவித்தல் (Declaration of Results), மருத்துவத்தேர்வு (Medical Examination) பற்றிய தெளிவான தகவல்களும் இந்நூலில் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நூலை எழுதியிருக்கும் நெல்லை கவிநேசன் ஆழ்ந்த அனுபவத்தின்மூலம் கிடைத்த பயிற்சிகளில் இந்த “SSB இண்டர்வியூ வெற்றிக்கான வழிகள்” நூலை எழுதியுள்ளதால், இந்நூல் போட்டித் தேர்வு எழுதுபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துரையிடுக