வங்கித் தேர்வுக்கான வழிகாட்டி



புத்தகத்தைப்பற்றி…

‘வங்கிகளில் பணிபுரிய ஆசையாக இருக்கிறது. வங்கியில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா?’ என்று ஆசைப்பட்டு படிப்பைத் தொடருகின்ற மாணவ-மாணவிகள் பலர் உள்ளனர்.

வங்கியில் பணிபுரிய ஆசை இருந்தாலும், அந்தப்பணியில் சேர என்னென்ன கல்வித்தகுதிகள் வேண்டும்? அந்தப் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வு எது?, அந்தத் தேர்வில் கேள்விகள் எப்படி இடம்பெறும்?, தேர்வுக்கான தயாரிப்பை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்? என்பதுபோன்ற பல தகவல்களை சிலர் தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. இதனால், “வங்கியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த விருப்பத்தை அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல்போய்விடுகிறது.

“வங்கிப் பணியில் சேர வேண்டும்” என்ற எண்ணம் உள்ளவர்கள் இளம்வயதிலிருந்தே வங்கித் தேர்வுக்கான தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி, தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை கவிநேசன் எழுதிய நூல் “வங்கித்தேர்வுக்கான வழிகாட்டி” ஆகும்.

    இந்நூல் வங்கித்தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு உதவும்வகையில் - புத்திக்கூர்மைத் திறன் (Test of Reasoning Ability), கணிதத்திறன் (Quantitative), பொதுஅறிவு (General Awareness), பொது ஆங்கிலம் (General Awareness), அங்காடியியல் திறன் மற்றும் கணிப்பொறி அறிவு (Marketing Aptitude / Computer Knowledge) ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய நெல்லை கவிநேசன் எழுதியுள்ள சிறந்த நூல் ஆகும். 


விலை: ருபாய்.60/-


Post a Comment

புதியது பழையவை